புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2016

அந்த தப்புக்கு இதுதான் தண்டனை..! ராதாபுரத்தை அதிர வைத்த கொடூரம்

பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு அரபுநாடுகளில்தான்
இத்தகைய கொடூர தண்டனைகள்கொடுக்கப்படும். அத்தகைய தண்டனை நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் பிச்சைக்காரர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், ராதாபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இளையநயினார்குளத்தில் நிர்வாண நிலையில் ஆண் சடலம் கடந்த 27.8.2016-ல் கிடந்தது. அந்த உடலில் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்ததும் பெண்கள் விவகாரத்தில் கொலை நடந்திருப்பதாக  போலீஸார் சந்தேகித்தனர். இதுதொடர்பாக சவுந்திரபாண்டியபுரம் கிராம நிர்வாக அலுவலர் வேலுத்தாய், ராதாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.  விசாரணையில் இறந்து கிடந்தவர் நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள பாம்பன்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்றும், பிச்சை எடுப்பவர் என்பதும் தெரியவந்தது. ரமேஷ் எதற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது போலீஸாரின் கேள்வியாக இருந்தது. அவரை கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த சமயத்தில் ரமேஷ் கொலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துப்புதுலங்கியது. அவரைக் கொலை செய்தது தூத்துக்குடியைச் சேர்ந்த மகாராஜன் என்பது தெரிந்தது. இதனால் அவரை பிடித்த போலீஸார் மகாராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "பாம்பன் குளத்தைச் சேர்ந்த ரமேஷ், வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்துள்ளார். மது அருந்தும் பழக்கமும் உள்ளது. இவருக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாகர்கோவில் அருகே உள்ள ராஜாவூரில் உள்ள சர்ச்சுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மனநலம் பாதிப்பு சரியாகி விட்டது. ஆனால் அதேநேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சமயத்தில் அவர் பிச்சை எடுக்கும் பழக்கத்தைக் கற்றுள்ளார். பிறகு அதையே தொழிலாக மாற்றியுள்ளார். இந்த சூழ்நிலையில் ரமேசுக்கு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் அவர் எல்லை மீறியதாகவும் தெரிகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு  பாம்பன்குளம் வந்த ரமேஷ், மகாராஜனின் மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இந்த ஆத்திரத்தில் ரமேஷை, மகாராஜன் கொடூரமாக கொலை செய்துள்ளார். போலீஸ் பிடியில் இருக்கும் மகாராஜன் மீது தூத்துக்குடி தாளமுத்துநகரில் 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது. இதுதவிர திருட்டு வழக்குகளும் உள்ளன. இவர் ஒரு கட்சியில் பணகுடி நகர துணைச் செயலாளராகவும் உள்ளார்.
ரமேஷ் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் பிச்சைக்காரனுக்குள் நடந்த மோதலில் சகாயம் என்பவரை கொலை செய்த வழக்கும் உள்ளது. ரமேஷ், சில பெண்களுடன் குடும்பமும் நடத்தியுள்ளார். பிச்சையாக கிடைக்கும் பணத்தில் மதுஅருந்திவிட்டு இதுபோல அவர் வாழ்ந்துள்ளார்" என்றார்.
போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "ரமேஷின் உடல் கிடந்த நிலையைப் பார்த்ததும் பெண் தொடர்பில் இந்த கொலை நடந்திருப்பதாக நாங்கள் சந்தேகித்தோம். அது இப்போது உறுதியாகி இருக்கிறது. ரமேஷுடன் பழக்கத்தில் இருந்த பெண்கள் அனைவரும் பிச்சை எடுக்கும் கும்பல். இதனால் பெரியளவில் பிரச்னை ஏற்படவில்லை. தூத்துக்குடியைச் சேர்ந்த மகாராஜன்,  பாம்பன்குளத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து அங்கேயே குடியிருந்து வருகிறார். இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. மகாராஜனின் மகள் விவகாரத்தில்தான் ரமேஷுக்கும், அவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ரமேஷ் மீதுள்ள கொலை வழக்கும் பெண் தொடர்புடையதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். ரமேஷிக்கு தெரிந்த பெண்களிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அவர் குறித்த தகவல்களை அந்தப் பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கொலையில் அவர்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இதனால் அவர்களை விட்டுவிட்டோம். ரமேஷ், பெண்கள் விஷயத்தில் ஒருமாதிரி என்பது மட்டும் இப்போதைக்கு தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. விசாரணை முடிந்த பின்னர் மகாராஜன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்" என்றனர்.

ad

ad