புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2016

ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவுதினத்தில் யாழில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்பட்டதை முன்னிட்டு  இன்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
 
யாழ்ப்பாணம் – ஏ9 வீதியிலுள்ள மாநகர சபைக்கு முன்னால் உள்ள விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவு தூபிக்கு ஊடகவியலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்துள்ளனர்.

இந்த நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றி தென்பகுதியில் இருந்து வந்திருந்த சிங்களஊடகவியலாளர்களும், ஊடகஉரிமைக்கான செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்ட ருந்தனர்.
 
இதனையடுத்து நிமலாராஜனின் படுகொலைக்கு நீதி கோரி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 அளவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  

ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதமின்றிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
 
ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உடனடியாக அமுல்ப டுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்டது.

ad

ad