
விரிவுரையாளர் + யாழ் உதைபந்தாட்ட சம்மேளன உபதலைவர் திரு . மாணிக்கவாசகர் இளம்பிறையன் , சமூக ஆர்வலர் திரு . சபா பரமேஸ்வரன் , கிராமசேவகர் திரு . கோகுலன் , சூழகம் ஒருங்கிணைப்பாளர் திரு . கருணாகரன் குணாளன் மற்றும் கழக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர் . தீவகமட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளிலும் வலைப்பந்து ( netball ) போட்டிகளிலும் நயினாதீவினைச் சேர்ந்த அணிகள் பல்வேறு சிறப்பான வெற்றிகளை குவித்துள்ளன . ஆகவே இப்போட்டிகளிலும் ஐக்கிய அணிகளினை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையும் கழக பிரதிநிதிகளால் விடுக்கப்பட்டது . அக்கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது . நயினாதீவு யுனைட்டெட் கழகத்திற்கான இடைக்கால நிர்வாகமும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது . ஞானவைரவர் கழகத்தினை சேர்ந்த திரு . யசோதரன் தலைவராகவும் , செயலாளராக அண்ணா கழகத்தினை சேர்ந்த திரு . ஜெயராஜ் அவர்களும் பொருளாளராக இஸ்லாம் கழகத்தினை சேர்ந்த திரு . ஜிப்ரில் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர் . அத்துடன் ரூபாய் இருபதினாயிரம் பெறுமதியான உதைபந்துகள் சூழகம் ஒருங்கிணைப்பாளர் குணாளன் கருணாகரன் அவர்களது நிதியுதவி மூலம் கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன . இக்கலந்துரையாடல் சிறப்பாக நடைபெறுவதற்கு பெரிதும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்த அண்ணா சனசமூக நிலையத்தினருக்கு எமது நன்றிகள் - #சூழகம் -