புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2016

நற்பெயருக்கு களங்கமாம் நாமல் வழக்குத் தாக்கல்

ஆதாரமற்ற முறைப்பாடு மற்றும் கைது செய்த குற்றங்களுக்காக நஸ்ட ஈடாக ரூபா 200 மில்லியன் கோரி நிதி மோசடி விசார ணைப் பிரிவில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க வழங்கிய கிரிஸ் ஒப்பந்த முறைப்பாட்டின் அடிப்ப டையில் தான் ஒருவாரம் கைது செய்யப்பட்டிருந்ததாக குறித்த மனுவில் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,மற்றும் எஸ்.ஐ ஆகியோரிடம் தலா 100 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரி இந்த வழக்குத் தாக்கல் செய்து ள்ளார்.

 கிரிஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் நாமல் ராஜபக்ஸ, ஜூலை மாதம் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு  ஒரு வாரத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

ad

ad