புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2017

காணிக்குள் விடும் பட்சத்திலேயே போராட்டம் நிறுத்தப்படும்-புதுக்குடியிருப்பு மக்கள் தெரிவிப்பு


முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள ஏழரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு ள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த ஏழரை ஏக்கர் காணிக்குள் தங்களை விடும் பட்சத்திலேயே போராட்டத்தைக் கைவிடுவோம் என புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம. பிரதீபன் ஆகியோர் புதுக்குடியிருப்பில் கடந்த 26 ஆவது நாளாக நிலமீட்புக்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இன்று சந்தித்தனர்.  

இதன்போது, முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரியினால் மாவட்ட அரசாங்க அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

குறிதத் கடிதத்தில் புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்கள் 29 பேரினுடைய 7.75 ஏக்கர் காணி 2 வாரத்தில் விடுவிக்கப்படும் என்றும் மீதமுள்ள 29 பேரின் 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றிய பின்னர் மூன்று மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என்றும் பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் இதன்படி போராட்டத்தைக் கைவிடுமாறும் வலியுறுத்தப்பட்டது.  

இதற்கு புதுக்குடியிருப்பு மக்கள் உடன்படாத நிலையில், 7.75 ஏக்கர் காணிக்குள் தங்களை விடும் பட்சத்திலேயே, தாம் போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ad

ad