1 மார்., 2017

நெடுவாசல் போராட்டத்தை கைவிட எடப்பாடி வேண்டுகோள்

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் 14வது நாளாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது.  

இந்நிலையில் இன்று நெடுவாசல் கிராம  பிரதிநிதிகளுக்கு முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  
அவர்,  விவசாயிகள் நலனைக்காப்பதில் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.  ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது. விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பதால்தமிழக அரசு அனுமதி வழங்காது.   ஆகவே, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை.  அரசின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.