புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2017

பிலக்குடியிருப்பில் 46 குடும்பங்களின் காணிகள் விடுவிப்பு

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின்  ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

விமானப்படையினர் வசமிருந்த பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் இன்று முற்பகல் திறந்துவிடப்பட்டதை அடுத்து, சொந்த காணிகளுக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர். 

எனினும் பிலக்குடியிருப்பிலுள்ள 54 குடும்பங்களின் காணியில் 8 குடும்பங்களின் காணிகள் தற்பொழுது விடுவிக்கப்படாது என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 

8 குடும்பங்களின் காணிகளும் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்

ad

ad