புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2018

தனியார் துறையில் பணியாற்றும் முன்னாள் போராளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க நடவடிக்கை

தனியார் துறையில் பணியாற்றும், முன்னாள் போராளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட புனர்வாழ்வுக் கிளைக்குப் பொறுப்பான அதிகாரி அறிவித்துள்ளார்.

தனியார் துறையில் பணியாற்றும், முன்னாள் போராளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட புனர்வாழ்வுக் கிளைக்குப் பொறுப்பான அதிகாரி அறிவித்துள்ளார்.
 "மறுவாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

அந்த உதவித் தொகையை யாழ். மாவட்டத்தில் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் முன்னாள் போராளிகள் இந்த உதவித் தொகையைப் பெற முடியும். பணியாற்றும் நிறுவனத்தால் அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதித் தொகை செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
 இந்த விடயங்கள் பின்பற்றப்படும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மறுவாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் தமது விவரங்களை யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள புனர்வாழ்வுக் கிளையில் பதிவு செய்ய வேண்டும்.
 தகுதியானவர்களுக்கான 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்று புனர்வாழ்வுக் கிளையின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ad

ad