புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2018

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல் ஆணையம் தடை

விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்தே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நேற்று கொழும்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.h

இதன் போது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும், தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமை mப்பு என்ற பெயரைப் பயன்படுத்தி வருவதாகவும், வாக்காளர்களைத் திசை திருப்பும் வகையில் தமது கட்சியின் பெயரை ஒத்ததாக- இந்தப் பெயரைப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
m
இதையடுத்தே, தமிழ்த் தேசிய விடுதலைக் கூhட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது.

அதேவேளை, இந்தத் தடை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவுக்கு தமிழ் அரசுக் கட்சியின் செயலர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்போ பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லாத நிலையில், தேர்தல் ஆணைக்குழு ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad