புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2018

படுகொலைகளுக்கு நியாயம் கிட்டும்வரை ஓயமாட்டோம்


தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு நிகழ்வில் சித்தார்த்தன் எம்.பி.
“தமிழ் மக்களுக்கு எதிராகத் தமிழர் தாயகத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும். அத்தோடு நீண்டகாலமாக இருந்து வரும் இனப்பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு
ஏற்படுத்தப்படவேண்டும். அதுவரை நாம் போராட்டத்திலிருந்து ஓயமாட்டோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று யாழ்.முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“எமது இனம் மிகப்பெரிய படுகொலைகளைச் சந்தித்து வந்துள்ளது. இந்தப் படுகொலைகளில் 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையானது தமிழ் மக்களிடையே பல அதிர்வலைகளை ஏற்படுத்த அடிப்படையாக இருந்துள்ளது.
இந்தியாவில் இருந்து வந்த தலைவர்கள், எமது தலைவர்கள், ஆகியோரது உரைகளை அப்பாவித் தமிழர்கள் கேட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸார் ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கி சூடு நடத்தியதால் மின்சாரக் கம்பிகள் அறுந்து மக்கள் துடிதுடித்து உயிரிழந்தார்கள்.
பொலிஸாரின் தடியடிக்குப் பயந்து அப்பாவி மக்கள் சிதறி ஓடியபோது நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இவ்வாறு எமது வரலாற்றில் கறைபடிந்த நாளாக இந்த நாள் இருக்கின்றது.
அதேநேரத்தில் மக்கள் தமது உணர்வுகளை இதுபோன்ற நினைவு தினங்களில் வெளிக்காட்டவேண்டும். மேலும், இந்தப் படுகொலைகளுக்கு நீதியாக இறுதித் தீர்வு எட்டும் வரையில் ஓயமாட்டோம்” – என்றார்.

ad

ad