புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2018

இடைக்கால அறிக்கை: மாயைகளை கட்டுடைத்தல் - யாழ்ப்பாணத்தில் கருத்தமர்வும் கலந்துரையாடலும்

இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல் என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் மற்றும் கருத்தமர்வில், வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமை உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து “வடகிழக்கு தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம்" எனும் தலைப்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைகழக சட்டத்துறை பேராசிரியர் முத்துகுமாரசாமி சொர்ணராஜா உரையாற்றினார். தொடர்ந்து “இடைக்கால அறிக்கை மாயைகளை கட்டுடைத்தல்" என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைகழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றினார்.

அதேவேளை, முன்னதாக தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தமர்வும் கலந்துரையாடலும் அரசியல் கலப்படமற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என யாழ்.மாவட்ட செயலரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான நா.வேதநாயகன் அறிவித்திருந்தார்.

குறித்த கருத்தமர்வு குறிப்பிட்ட சில கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்களை ஊக்குவிப்பதாகவோ, அல்லது பின்னடையச் செய்வதாகவோ அமையலாம் என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது எனவே கருத்தமர்வும் கலந்துரையாடலும் அரசியல் கலப்படமற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad