புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2018

பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி நகை மோசடி வழக்கில் கைது

பிரபல சிங்களப் பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் (வயது-75) இளம் மனைவி ஹசினி அமேன்ந்ராவை (வயது -32) எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தங்காலை மேல் நிதிமன்ற நீதவான் மஹில் விஜேவீர இன்று உத்தரவிட்டார். தங்க ஆபரண மோசடி சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸாரால் தேடப்பட்டுவந்த ஹசினி அமேன்ந்ரா, இன்று காலை தங்காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவரை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்தப் பெண் தங்காலையில் உள்ள அரச வங்கியொன்றில் கடமையாற்றிய போது கடந்த 2012.11.14 - 2016.04.22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வங்கியில் இடம்பெற்ற 9,89,000 ரூபா தங்க ஆபரண மோசடி தொடர்பில் வங்கி முகாமையாளர் இவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதற்கமைய குறித்தப் பெண் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று சட்டத்தரணியுடன் தங்காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தப் பெண் சரணடையாவிட்டால் பெண்ணின் கனவரை கைது செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை மூடி மறைக்க குறித்தப் பெண் இலஞ்சம் வழங்கியமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

ad

ad