புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2018

இரட்டை குடியுரிமை வேண்டும்! மத்திய அரசு அதிகாரிகளிடம் ஈழத்தமிழர்கள் கோரிக்கை

25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழ ஏதிலியர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.




இலங்கையில் ஏற்பட்ட போரின் போது, கடந்த 1992- ஆம் ஆண்டு அங்கிருந்து அகதிகளாக தப்பி தமிழகம் வந்த ஈழத்தமிழர்கள்,  தமிழகத்தின்  பல்வேறு  பகுதிகளில் மறுவாழ்வு  முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.  அவ்வாறு தங்கியவர்கள் போலீஸாரால்  தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மாநில அரசால் வழங்கப்பட்டு, அவ்வப்போது  ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சக செயலாளர்கள் பரிதா,  சதிஷ்குமார் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகள் விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கோண்டனர், முகாமில் அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள்,  அங்கு குடியிருக்கும் ஈழ தமிழர்களிடம், குறைகளை கேட்டு அறிந்தனர்.

அப்போது, “25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் தங்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இருக்கிறது. ஆனாலும் சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் மேல்படிப்பு படிப்பதற்கும் இயலவில்லை.  பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. ஆகவே இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இலங்கை செல்பவர்களுக்கு கப்பல் ஏற்பாடு செய்து தர வேண்டும்,  மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும், வங்கிகடன் வழங்க வேண்டும்,  ஒட்டுனர் உரிமம் வழங்கவேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

ad

ad