புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 ஜன., 2018

தயா மாஸ்டரைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவை பிறப்பித்துள்ளார். 52 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியின் ஊடகப் பணிப்பாளராக பணியாற்றி வரும் தயா மாஸ்டர் மீது நேற்றுமுன்தினம் பிற்பகல் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியிருந்தார். இந்த தாக்குதலின் போது தயா மாஸ்டருக்கு சிறயளவிலான காயங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியிருந்தது.வீடொன்றில் தொலைக்காட்சி கேபிள் துண்டிக்கப்பட்டமையினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.