புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2018

சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களின் பட்டியல் இன்று வழங்க வாய்ப்பு: ஆணைய வட்டாரங்கள் தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் போது சசிகலாவிற்கு எதிராக சாட்சி அளித்தவர்களின் பட்டியலை இன்று சசிகலா தரப்பிடம் வழங்க வாய்ப்புள்ளதாக ஆணைய வட்டாரங்கள்
தெரிவிக்கிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் பலர் சசிகலாவின் பெயரை பயன்படுத்தியதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து, கடந்த 21ம் தேதி சசிகலாவுக்கு ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
அதில் ‘உங்களுக்கு எதிராக சிலர் ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளார்கள். அவ்வாறு சாட்சியம் அளித்ததால் உங்களது விளக்கத்தை ஆணையம் கேட்க வேண்டிய நிலை வந்துள்ளது. ஆகவே, உங்களால் முடிந்தால் நேரில்  ஆஜராகி வாக்குமூலமாகவோ அல்லது வக்கீல் மூலமோ பிரமாண பத்திரங்கள் அடங்கிய விளக்கத்தை தரும்படி’ ஆணையம் சார்பில் அனுப்பிய சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு சசிகலா தரப்பிலான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கடந்த 5ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி, சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளவர்களின் பெயர், அவர்களது வக்கீல்கள் யார்? அவர்கள்  அளித்த சாட்சியத்தின் நகல்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
இந்த ஆவணங்களை அளித்த பிறகு எங்கள் தரப்பு வாதத்தை தாக்கல் செய்ய 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். விசாரணை  ஆணையம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று, சசிகலாவிற்கு எதிராக சாட்சி அளித்தவர்கள் அடங்கிய நகல்களை கொடுக்க முடிவு செய்தது.இன்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேட்ட ஆவணங்களை ஆணையம் கொடுக்கும் என ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனை தொடர்ந்து 15 நாட்களில் சசிகலா தரப்பில் விளக்கம் அளிக்கப்படும்.   

ad

ad