புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2018

யாழில் எஸ் எஸ் குகநாதனின் டான் டி வி இன் நிறுவனமான அஸ்க் மட்டுமே கேபிள் உரிமை பெற்ற ஸ்தாபனம்

யாழில் எஸ் எஸ் குகநாதனின் டான் டி வி இன் நிறுவனமான அஸ்க் மட்டுமே கேபிள் உரிமை பெற்ற ஸ்தாபனம் இன்று களமிறங்கிய தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதிப்பத்திரமின்றி முன்னெடுக்கப்பட்ட கேபிள் இணைப்புகள், இன்று அதிகாலை முதல் அகற்றப்பட்டு வருகின்றன. கொழும்பிலிருந்து வருகை தந்த தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகளாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.



யாழில் அதிரடியாக இன்று களமிறங்கிய தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு!



அரசின் அனுமதிப் பத்திரமின்றி தொலைக்காட்சி அலைவரிசைகளின் கேபிள் இணைப்பை வழங்க முடியாது என, தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அத்தோடு, சட்டவிரோத கேபிள்கள் அனைத்தையும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் அகற்றுமாறும் அது கேட்டுக்கொண்டது. எனினும் அவை அகற்றப்படவில்லை.

இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று(10.01.2018) அதிகாலை, யாழ்ப்பாணம் வருகை தந்தனர். ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று சட்டவிரோத கேபிள் இணைப்புகளை, அவர்கள் அறுத்து அகற்றினர்.



மேலும் சட்டவிரோதமாக கேபிள் இணைப்பை வழங்கியவர்களின் சேவை நிலையத்தை முற்றுகையிட்டு, அங்குள்ள தொழில்நுட்ப சாதனங்களை அரசுடைமையாக்கும் பணிகளை, அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் அஸ்க் மீடியா(ASK media) மட்டுமே அனுமதிபெற்ற கேபிள் சேவை வழங்குனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad