புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2018

முல்லைத்தீவில் 4 பிரதேச சபைகளுக்கும் தவிசாளர்கள், நியமனம்

முல்லைத்தீவில் நான்கு பிரதேச சபைகளுக்கும் தவிசாளர், பிரதி தவிசாளர்களை தெரிவு செய்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒட்டுசுட்டானில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடவின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
முல்லைத்தீவில் நான்கு பிரதேச சபைகளுக்கும் தவிசாளர், பிரதி தவிசாளர்களை தெரிவு செய்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒட்டுசுட்டானில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடவின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதன்போதே, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய 4 உள்ளுராட்சி சபைகளுக்கும் தவிசாளர், பிரதி தவிசாளர்களை தெரிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதற்கமைய, புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளராக முதல் 2 ஆண்டுகளுக்கு செல்லையா பிரேமகாந்தும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு அருளானந்தம் தவக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உப தவிசாளராக முதல் 2 ஆண்டுகளுக்கு கனகசுந்தரசுவாமி ஜெயந்த்தும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு சபாரெத்தினம் திருச்செல்வமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக முதல் 2 ஆண்டுகளுக்கு கனகையா தவராசாவும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கமலநாயகம் விஜிந்தனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உப தவிசாளராக முதல் 2 ஆண்டுகளுக்கு திருச்செல்வம் இரவீந்திரனும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மரியநாயகம் தொம்மைபிள்ளையும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று துணுக்காய் பிரதேச சபைக்கு தவிசாளராக அம்பலவாணர் அமிர்தலிங்கமும், உப தவிசாளராக தங்கவேல் சிவகுமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாந்தை கிழக்குப் பிரதேச சபைக்கு தவிசாளராக சிவலோகநாதன் செந்தூரனும் உப தவிசாளராக பொன்னையா ஆனந்தகுமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ad

ad