புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2018

இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி

டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதல் 20க்கு 20 போட்டியில் 16.4 ஓவரில் 194 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றிக்கு மெண்டிஸ் மற்றும் தசுன் ஷானக்க, திஸர பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெற்றியை ஈட்டிக் கொடுத்தனர்.இலங்கை அணி 20 பந்துகள் மீத மிருக்கையில் வெற்றியை அடைந்தது.

பங்களாதேஷ் - - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட 20க்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டாக்காவில நேற்று நடைபெற்றது.நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணியில் ஜகிர் ஹசன், அபிஃப் ஹொசைன், அரிபுல் ஹக்யூ, நஸ்முல் இஸ்லாம் ஆகிய நான்கு வீரர்கள் அறிமுகமானார்கள். இலங்கை அணியில் மதுஷங்க அறிமுகமானார்.

பங்களாதேஷ் அணியில் ஜகிர் ஹசன், சுமையா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜகிர் ஹசன் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழக்கும் போது பங்களாதேஷ் 4 ஓவரில் 49 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 2-வது விக்கெட்டுக்கு சுமையா சர்கார் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 6.1 ஓவரில் 51 ஒட்டங்கள் சேர்த்தது. சுமையா சர்கார் 32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ஒட்டங்கள் சேர்த்தார்.

அடுத்து வந்த அபிஃப் ஹொசைன் 0 வெளியேற, 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் மெஹ்துல்லா ஜோடி சேர்ந்தார். முஷ்பிகுர் ரஹிம் அரைசதம் அடிக்க, மெஹ்முதுல்லா 31 பந்தில் 43 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சபீர் ரஹ்மான் 1 ஓட்டத்தில் ஆட்டமிழக்க, முஷ்பிகுர் ரஹிம் 44 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 66 ஒட்டங்கள் சேர்க்க பங்களாதேஷ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 194 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய குசல் மெண்டிஸ், குணதிலக ஆகியோர் ருத்ர தாண்டவம் ஆடினார்கள். குணதிலக 15 பந்தில் 30 ஒட்டங்களும், குசல் மெண்டிஸ் 27 பந்தில் 53 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் 42 பந்தில் 83 ஒட்டங்கள் குவித்தனர். அதன்பின் வந்த தரங்க 4 ஒட்டங்களிலும், திக்வெல்ல 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இருந்தாலும் 5-வது விக்கெட்டுக்கு ஷானகவுடன் திசாரா பெரேரா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இலங்கை சேஸிங்கை நோக்கிச் சென்றது. இலங்கையின் ஸ்கோர் சராசரியாக ஓவருக்கு 10 ஓட்டங்களுக்கு மேல் இருந்து கொண்டே வந்தது. இலங்கை அணி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ஒட்டங்கள் சேர்த்தது.

இலங்கைக்கு கடைசி 5 ஓவரில் 27 ஒட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது. 27 ஓட்டங்களை 1.4 ஓவரில் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. தசுன் ஷானக 24 பந்தில் தலா 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 42 ஓட்டங்களுடனும், பெரேரா 18 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க வில்லை.இப்போட்டியின் ஆட்ட நாயகனாக மெண்டிஸ் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி 18-ம் திகதி நடக்கிறது.

ad

ad