ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் 2015ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்கள்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாத்திரம் பங்கேற்றிருந்தார். எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் கோயில் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமையால் பங்கேற்றிருக்கவில்லை.
நேற்று இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இருவரும் பங்கேற்கவில்லை.
தேர்தல் பரப்புரை காரணமாகவே இதில் பங்கேற்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தாலும், கூட்டமைப்பின் இந்த நடவடிக்கை அவதானிக்தக்க செயற்பாடு என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்