புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2018

புதன்கிழமை நள்ளிரவுடன் முடிகிறது தேர்தல் பிரசாரம்!

எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு பெறும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தலில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய எந்தவொரு பிரச்சாரம், சமூக சேவை அல்லது தேர்தலுடன் தொடர்புபடக் கூடிய எந்தவொரு செயற்பாட்டையும் வேட்பாளர்களோ அரசியல் கட்சிகளோ மேற்கொள்ள முடியாது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 43 அரசியல் கட்சிகள் மற்றும் 222 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் நாயகம் முஹம்மத் தெரிவித்துள்ளார். இவர்களில் இருந்து 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8 ஆயிரத்து 356 பேர் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இதற்கிடையே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை அந்தந்த வாக்குச் சாவடிகளிலேயே எண்ணுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 13 ஆயிரத்து 400 வாக்குச் சாவடிகளில் வாக்கெண்ணும் பணி நடைபெறவுள்ளது. எனினும் வாக்குச் சாவடி மட்டத்தில் வாக்குகளை எண்ணுவதா? அல்லது உள்ளூராட்சி மன்றத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து வாக்குகளையும் ஒரே வாக்குச் சாவடிக்குக் கொண்டு வந்து எண்ணுவது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது

ad

ad