புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2018

தி.மு.கவில் நான் சேருவதில் எந்த தவறும் இல்லை 2 வது நாள் ஆலோசனைக்கு பிறகு மு.க. அழகிரி பேட்டி

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து சென்னையில் 5–ந்தேதி அமைதிப் பேரணி நடத்தப்போவதாக
மு.க.அழகிரி அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மு.க.அழகிரி நேற்று மதுரை சத்தியசாய் நகரில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் முபாரக் மந்திரி, உதயகுமார், கோபிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்களும் பங்கேற்றனர். சென்னையில் நடைபெறும் பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இன்று இரண்டாவது நாளாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் மு.க. அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செப்.5 பேரணிக்கு பிறகு மக்கள் என்னை எப்படி ஏற்றுகொள்கிறார்கள் என்று எனக்கு தெரியும். கருணாநிதி இருந்த போதே கட்சி பதவிக்கு ஆசைப்படாத நான் இப்போதா ஆசைப்பட போகிறேன். என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு தி.மு.க ஒரு முறை கூட தேர்தலிலும் ஒரு முறை கூட வெற்றி பெற வில்லை. அவசர அவசரமாக தி.முக பதவியை ஏற்க செல்கிறார் மு.க ஸ்டாலின். தாய்கழகமான தி.மு.கவில் நான் சேருவதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.

ad

ad