புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஆக., 2018

இவர் என்ன தலைவரா..?!' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி`அங்கே என்ன நடக்கிறது. பொதுக்குழுவை 1-ம் தேதி தானே கூட்டுவதாக முடிவு செய்திருந்தோம்?' எனக் கேட்க, '
தலைமை எடுத்த அவசர முடிவு இது' எனப் பதில் வந்துள்ளது.

தி.மு.க பொதுக்குழு வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி கூடுவதாக அறிவித்திருக்கிறார் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன். ' அழகிரி நடத்தப் போகும் அமைதிப்பேரணியும் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளும்தான் பொதுக்குழுவை அவசரமாகக் கூட்டுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.
பதறிய ஆர்.எஸ்.பாரதி!
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொதுக்குழு கூட இருக்கிறது. கருணாநிதி மறைவுக்குப் பிறகு அவசர செயற்குழுவைக் கூட்டி அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், வரும் 28-ம் தேதி தி.மு.கவின் அதிகாரபூர்வ தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளராக துரைமுருகனும் முதன்மை நிலையச் செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுக்குழு கூட்டம் குறித்து நேற்று மாலை அவசர அறிவிப்பு வெளியான நேரத்தில், டெல்லியில் வாஜ்பாய் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தார் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. பொதுக்குழு குறித்த அறிவிப்பு தொலைக்காட்சிகளில் ஓடுவதைக் கண்டு பதறிப்போய், தி.மு.க-வின் சீனியர் நிர்வாகி ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ' அங்கே என்ன நடக்கிறது. பொதுக்குழுவை 1-ம் தேதி தானே கூட்டுவதாக முடிவு செய்திருந்தோம்?' எனக் கேட்க, ' தலைமை எடுத்த அவசர முடிவு இது' எனக் கூற, ' அப்படியானால், எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு 24, 25 தேதிகளில் அறிவாலயம் வந்துவிட்டால் போதும் என நினைக்கிறேன்' எனப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.
அழகிரி அழைக்கிறார்!
' பொதுக்குழுவை அவசரமாகக் கூட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?' என தி.மு.க-வின் சீனியர் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். `` அவசர செயற்குழுவை நடத்துவதற்கு முடிவு செய்த நேரத்திலேயே, ' 1-ம் தேதி பொதுக்குழுவை நடத்துவோம்' என நிர்வாகிகள் அனைவரும் கூடிப் பேசி முடிவு செய்துவிட்டனர். இப்போது முன்கூட்டியே தேதியை அறிவிப்பதன் பின்னணியில் சில விஷயங்கள் நடந்துள்ளன" என விவரித்தவர், ``கருணாநிதி சமாதியை நோக்கி வரும் 5-ம் தேதி அமைதிப் பேரணியை நடத்த இருக்கிறார் அழகிரி. 'மதுரையில் இருந்து சிலரைக் கூட்டி வந்து பேரணியை நடத்திவிட்டுச் சென்றுவிடுவார்' என்றுதான் தலைமைக் கழகத்தில் உள்ளவர்கள் நினைத்திருந்தார்கள்.
``நிலைமையை விளக்கும் அந்தக் கண்கள்" - குட்டி நாயை மீட்டு உணவளித்த தமிழர்...!
ராஜாஜி ஹால் நெரிசலில் ராகுல்... சிக்கலில் ஐ.பி.எஸ்-கள்... தப்பிய ஒருவர்
ஆராதனா குரலில் ‘வாயாடி பெத்த புள்ள’.. சிவகார்த்திகேயனுக்கு டபுள் ட்ரீட்
ஆனால், களநிலவரம் வேறு மாதிரிச் சென்று கொண்டிருக்கிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கட்சியின் சீனியர் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார் அழகிரி. இந்த நிர்வாகிகளை எல்லாம் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒதுக்கி வைத்துவிட்டார் ஸ்டாலின். இவர்களிடம் பேசும் அழகிரி தரப்பினர், ' கலைஞரின் உண்மை விசுவாசிகளாக பேரணியில் கலந்துகொள்ளுங்கள். மற்றதை அண்ணன் பார்த்துக்கொள்வார்' எனப் பேசியுள்ளனர். இதையே ஸ்டாலினிடம் நெருங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட நிர்வாகிகள் சிலர், ' அழகிரி அழைக்கிறார்' என அறிவாலயத்துக்குத் தகவல் சொல்லி அனுப்பியுள்ளனர். இது மட்டுமல்லாமல், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து வருகிறார் அழகிரி. இப்படியொரு நடவடிக்கையை ஸ்டாலின் ரசிக்கவில்லை" என்றவர்,
கொந்தளித்த ஸ்டாலின்!
``அழகிரியை சமாளிப்பது குறித்து கட்சியின் நிர்வாகிகள் விவாதித்து வந்த நேரத்தில், தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன். அந்தப் பேட்டியில், ' திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதியை நிறுத்துவது குறித்தும் அழகிரி குறித்தும் சில விஷயங்களைத் தெரிவித்திருக்கிறார் இளங்கோவன். அந்த நிகழ்ச்சியில் கேட்ட கேள்விகளுக்கு அவர் சரியான பதிலைக் கொடுத்திருந்தாலும், வெளியில் அழகிரிக்கு சார்பான பேட்டியாக வந்துவிட்டது. இந்தப் பேட்டியால் கொந்தளிப்பின் உச்சிக்கே போய்விட்டார் ஸ்டாலின். நேற்று முன்தினம் மதுரையில் கருணாநிதிக்குப் புகழஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
அந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் முன்னிலையில், ' இப்படியெல்லாம் பேசுவதற்கு யார் அனுமதி தந்தது? இவர் என்ன தலைவரா...முடிவெடுத்து அறிவிப்பதற்கு...திருவாரூரில் அவரே போட்டியிடட்டும். நாமினேஷனைக்கூட நான் செய்ய மாட்டேன்' என ஆடித் தீர்த்துவிட்டார் ஸ்டாலின். இதை டி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்பார்க்கவில்லை. அழகிரி ஆட்டம் ஒருபுறம், இரண்டாம்கட்டத் தலைவர்களின் தன்னிச்சையான செயல்பாடுகள் ஒருபுறம் என அனைத்தும் சேர்ந்துதான் பொதுக்குழுவை அவரசமாக அறிவிக்க வைத்துவிட்டது. நேற்று இதுகுறித்த தகவலை மட்டும் பேராசிரியருக்குச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். பொதுக்குழு செய்தியை முரசொலிக்குச் சொல்லாமல், ' கலைஞர் தொலைக்காட்சிக்கு முதலில் சொல்லிவிடுங்கள்' எனக் கூறிவிட்டார் ஸ்டாலின். தலைமையின் அறிவிப்பே மிகத் தாமதமாகத்தான் முக்கிய நிர்வாகிகளுக்குச் சென்று சேர்ந்தது" என்றார் நிதானமாக.
1-ம் நம்பர் ராசி!
`` அவசர செயற்குழுவைத் தொடர்ந்து பொதுக்குழுவை அவசரமாக நடத்தி முடிக்க இருக்கிறார் ஸ்டாலின். மார்ச் 1-ம் தேதி பிறந்த அவர், செப்டம்பர் 1-ம் தேதி தலைவராக முடிவு செய்திருந்தார். பொதுவாக, 1-ம் நம்பரை ராசியாக நினைக்கும் அவர், 28-ம் தேதி நடக்கப் போகும் பொதுக்குழுவில் தலைவராக பதவியேற்க இருக்கிறார். இதன் கூட்டுத் தொகையும் ஒன்றாம் நம்பர்தான்" என்கின்றனர் குடும்ப உறவுகள்.