புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2018

செய்­ய­வேண்­டிய விட­யங்­களை உரிய காலத்தில் செய்வோம்.....விக்­கி­னேஸ்­வரன் விவ­காரம் தொடர்பில் சம்­பந்தன் கருத்து



வடக்கு முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக விக்­கி­னே ஸ்­வரன் கூட்­ட­மைப்­பினால் நிறுத்­தப்­ப­ட­வேண்­டு மென மக்கள் எதிர்­பார்ப்­பார்­க­ளானால் அது­பற்றி அவ­ச­ரப்­பட்டு முடி­வெ­டுக்­கவோ பகி­ரங்­க­மா­க­ பே­சவோ வேண்­டிய அவ­சி­ய­மில்­லை­யெ­னக் ­க­ரு­து­கிறேன். பக்­கு­வ­மாக, அமை­தி­யாக, பர­ப­ரப்­பில் லாமல் இவ்­வி­டயம் தொடர்பில் முடி­வெ­டுக்­கப்­படும் என்று கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மா­கிய இரா சம்­பந்தன் தெரி­வித்தார்.
விக்­கி­னேஸ்­வ­ர­னையே எதிர்­வரும் மாகாண சபை தோ்தலில் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட­பா­ளா­ராக நிறுத்­த­வேண்டும் என கூட்­ட­மைப்பின் தலை­மைக்கு தாம் வலி­யு­றுத்­தி­வ­ரு­வ­தாக பங்­கா­ளிக்­கட்­சி­யான ரெலோவின் தலை­வரும் பாரா­ளு­மன்­றக்­கு­ழுக்­களின் பிர­தித்­த­லை­வ­ரான செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்­துள்ள கருத்து தொடர்பில் வின­வி­ய­போதே இரா. சம்­பந்தன் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்
தமிழ் மக்கள் மத்­தியில் இன்று அவ­சி­ய­மான தேவை­யாக இருப்­பது ஒற்­று­மை­யாகும்.இந்த ஒற்­று­மையை குலைக்கும் வகையில் குந்­த­க­மாக எவரும் செயற்­ப­டக்­கூ­டாது. அவ்­வாறு செயற்­பட்டால் தமிழ் மக்கள் எடுத்த ஜன­நா­யக தீர்ப்­புக்கு மாறாக அதை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­து­விடும்.
அவ்­வாறு யாரா­வது செயற்­பட முனைந்தால் எனது அபிப்­பி­ரா­யத்­தின்­படி அது­பா­ரிய தவ­றாக போய்­விடும். இன்­றைய நிலையில் எம்­மி­ட­முள்ள ஒரே­யொரு ஆயுதம் ஒற்­ற­மை­யென்­பதை அனை­வரும் புரிந்து கொள்­ள­வேண்டும்.
இந்த ஒற்­று­மையின் பலத்தை மற்­ற­வாகள் உணாந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­வ­கையில் நாம் நடந்­து­கொள்­ள­வேண்டும். அதுவே பலமாகும். இந்த ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் செய்யவேண்டிய விடயங்களை செய்யவேண்டிய காலத்தில் நாம் செய்வோம். இவ்விவகாரங்கள் தொடர்பில் அதிகம் பேசிக்கொண்டிருப்பது ஆரோக்கியமாக அமையாது என்பது எனது கருத்தாகும் என்றார்

ad

ad