புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2018

ஞானசார தேரருக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு?

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின்
பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு  மேன்முறையீட்டு நீதிமன்றம்,  நேற்றுமுன்தினம் ஆறு ஆண்டுகள் அனுபவிக்கும் வகையில், 19 ஆண்டு சிறைத்தண்டனையை விதித்திருந்தது.
இது குறித்து நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள சிறிலங்காவின் பெருநகர அபிவிருத்தி- மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க-
“ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வாய்ப்புகள் உள்ளன.
எனினும்,  ஞானசார தேரருக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு அளிக்கப்படும் என்று என்னால் உறுதிப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.

ad

ad