புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2018

சுவிட்சர்லாந்தின் நீதித்துறை மற்றும் பொலிஸ் அமைச்சர் (FDJP) சீமோனேட்டா சம்மருகாவாழைச்சேனை விஷயம்

நான்கு நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்தின் நீதித்துறை மற்றும்
பொலிஸ் அமைச்சர்  (FDJP)  சீமோனேட்டா  சம்மருகா (Simonetta Sommaruga) தலைமையிலான குழுவினர் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்தார்.வாழைச்சேனை விஷயம் 




கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பாக பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களிடம் கலந்துரையாடிய சைமண்டெட்டா சம்மருகா (Simonetta Sommaruga) இலங்கையில் தொழில்வாய்ப்புக்கல் இருந்தும் சிலர் வெளிநாட்டில் தொழில் பெறவேண்டும் என்று செல்வதற்கான காரணங்களை கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது தமது குடும்ப வறுமை காரணமாக அதிகளவு ஊதியம் கிடைப்பதால் சிலர் வெளிநாடு செல்வதாகவும் குறிப்பிட்ட சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செல்வதாகவும் இதனால் சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் இளவயது திருமணம் என்பன இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் ஐந்து வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உள்ள தாய்மாரை வீட்டுப்பணிப்பெண்னாக வெளிநாடு செல்ல அதிகாரிகள் தடுத்த போதும் சிலர் வெளிநாட்டுக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கு தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ் விடயங்கள் தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றுக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அகதிகள் தொடர்பான  ஒப்பந்தம் முடிந்த பின்னர்  இந்த விஷய த்தை  செய்தார் 

ad

ad