7 செப்., 2018

இலங்கை வருகின்றார் ஓ.பி.எஸ்!


இலங்கையில் இடம்பெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ம் திகதி இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதில் கலந்துகொள்ளவுள்ளார். இதன் போது யாழ். பல்கலைக்கழகத்திற்கு ஒரு இலட்சம் புத்தகங்களையும் வழங்கவுள்ளார்.

மேலும், இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில், இந்திய ஆசிரியர்களுக்கு இலங்கையிலும், இலங்கை ஆசிரியர்களுக்கு இந்தியாவிலும் சிறப்பு பயிற்சிகளை வழங்கவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.