புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2018

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர் சுப்பையா விஸ்வநாதன் ஆஜர்



முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

இதுவரை 100-க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடந்தி இருக்கிறது. டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அரசு அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்ளிட்டவர்கள் இந்த ஆணையத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.


சில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் சரவணன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ ஆஸ்பத்திரி, நிர்வாக அதிகாரி டாக்டர் சுப்பையா விஸ்வநாதன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்களில், சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாதவர்களுக்கு ஆணை யம் கண்டனம் தெரிவித்து இருந்தது.

ஆஜராகாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சம்மனில் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று டாக்டர்கள் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார்.

நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஜெயலலிதா சிகிச்சை பற்றி வாக்குமூலம் அளித்தார். நீதிபதி கேட்ட கேள்விகளுக்கும் பதில் கூறினார்.

ad

ad