புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2018

சூளைமேடு துப்பாக்கிச் சூட்டு வழக்கு- பிடியாணை விலக்கப்பட்டு விட்டது என்கிறார் டக்ளஸ்!

சூளைமேடு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை
நீக்கப்பட்டு விட்டதாகவும், தமது இந்தியப் பயணத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சூளைமேடு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நீக்கப்பட்டு விட்டதாகவும், தமது இந்தியப் பயணத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் 10 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு எதிர்வரும் 9ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது. இந்தக் குழுவில் டக்ளஸ் தேவானந்தாவும் இடம்பெற்றுள்ளார். சூழைமேட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்தியாவுக்கு செல்வது குறித்தே இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
அரசியல் உள்நோக்கத்துடனேயே தன்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நீதிமன்றுக்கு யாராவது சமுகமளிக்கவில்லை என்றால் அந்த நீதிமன்றத்தால் அவரை கண்டுபிடிக்குமாறு அல்லது அழைத்து வந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படி பொலிசாருக்கு ஆணையிடுவது வழமை. சென்னை சூழைமேட்டில் 1986 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது
சூழைமேட்டு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லாதுவிட்டாலும் ஈ.பி.ஆர்.எல்.எவ். என்ற அமைப்பில் இருந்த காரணத்தால் அதற்கான தார்மீக பொறுப்பை எடுத்திருந்தேன். இந்த வழக்கில் தொடர்புபட்டிருந்த நான் 1990 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்று இலங்கை வந்திருந்தேன்.
இலங்கையில் நான் இருந்தமையால் நீதிமன்றுக்குச் சமுகமளிக்கவில்லை என்ற காரணத்தால் நீதிமன்று எனக்கு அழைப்பாணை ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் நான் அதற்கு சரியான காரணத்தை கொடுத்திருந்தமையால் அந்த அழைப்பாணை எப்போதோ நீக்கப்பட்டுவிட்டது.
அதனால் குறித்த வழக்கு தொடர்பாக எனக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. தற்போதும் அந்த வழக்கு விசாரணை இருக்கின்றது. இதற்கு நான் வீடியோ காணொளியூடாக முன்னிலையாகி வருகின்றேன். அதுமட்டுமல்ல அந்த வழக்கு மிகவிரைவில் நிறைவுக்கு வந்துவிடும் என்றும் நம்புகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad