4 செப்., 2018

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 8-வது நாளான  இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 2 ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை எதிர்த்து விளையாடினார். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 6-3,5-7,6-7,6-7 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.