புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2018

இலங்­கை­யில் 90% பெண்­க­ளுக்கு – பாலி­யல் தொந்­த­ரவு- ஐ.நா. அறிக்கை

இலங்­கை­யில் பொதுப் போக்­கு­வ­ரத்­தின்போது, பெண்­க­ளில் 90 சத­வீ­த­மா­னவர்­கள் பாலி­யல் தொந் த­ர­வு­க­ளுக்கு
உள்­ளாவ­தாக ஐ.நா. சனத்­தொகை நிதி­யம் மேற்­கொண்ட ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. இந்த ஆய்வு தொடர்­பான அறிக்­கையை ஐக்­கிய நாடு­க­ளின் சனத்­தொகை நிதி­யம் கடந்த வாரம் வெளி­யிட்­டுள்­ளது.வன்­முறை, வேறு­பா­டு­க­ளுக்­குள்­ளா­வது, வறுமை என்­ப­தால் புரிந்து கொள்­ளப்­பட்ட பிரச்­சி­னை­கள், இலங்­கையை போலவே உலக நாடு­க­ளி­லும் பெண்­கள் பாலி­யல் ரீதி­யான பாதிப்­பு­களை எதிர்­நோக்கி வரு­கின்­ற­னர். இந்த விட­யம் தொடர்­பில் போது­மான தர­வு­கள் இல்லை.இந்­தப் பிரச்­சி­னை­கள் பெண்­கள் மற்­றும் சிறிய பெண் பிள்­ளை­க­ளுக்கு மிக­வும் பரீட்­ச­ய­மா­னவை என்­ப­தும் ஆய்­வில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.பல சந்­தர்ப்­பங்­க­ளில் ஆண் பய­ணி­கள் சிறிய பெண் பிள்­ளை­களைத் தொடு­வது, அவர்­கள் மீது சாய்ந்து கொண்­டி­ருப்­பது போன்­ற­வற்றை தான் நேரில் பார்த்­தி­ருப்­ப­தாக 23 வய­தான வருணி மானேல் தெரி­வித்­துள்­ளார்.பேருந்து நடந்­து­நர்­க­ளும் சிறிய பெண் பிள்­ளை­களைப் பேருந்­தில் ஏற்­றும் போது தேவை­யற்ற வகை­யில் தொடு­வ­தை­யும் பார்த்­துள்­ளேன் என­வும் அவர் கூறி­யுள்­ளார்.பெண்­கள் மற்­றும் சிறிய பெண் பிள்­ளை­கள் கல்வி கற்­கும் இடங்­கள், தொழில் புரி­யும் இடங்­கள், வசிக்­கும் இடங்­கள் வரை இந்தத் தொந்­த­ர­வு­கள் இருப்­ப­தாக ஆய்­வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.2015ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த ஆய்­வில் 15 வயது முதல் 35 வய­தான 2 ஆயி­ரத்து 500 பெண்­கள் மற்­றும் பெண் பிள்­ளை­கள் உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.நேர்­கா­ணல்­கள், கேள்­வி­கள் மூலம் தக­வல்­கள் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இலங்­கை­யில் உள்ள 9 மாகா­ணங்­க­ளில் இருக்­கும் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் இந்த ஆய்வு நடத்­தப்­பட்­டுள்­ளது.பொதுப் போக்­கு­வ­ரத்து சாத­னங்­க­ளி­லேயே பெண்­கள் பாலி­யல் தொந்­த­ர­வுக்கு உள்­ளா­கும் அதி­க­ள­வான அனு­ப­வத்தைக் கொண்­டுள்­ள­னர். வாய்­மொழி மூல­மான ஆபா­ச­மான அவ­ம­திப்பு உள்­ளாக்­கப்­ப­டு­வது.தன்­னிச்­சை­யான தொடுகை. இவற்­றில் உடல் ரீதி­யான பாலி­யல் தொந்­த­ர­வு­களே அதி­கம். 74 வீத­மான பெண்­கள் மற்­றும் சிறிய பெண் பிள்­ளை­கள் தாம் வேண்­டு­மென்றே பாலி­யல் ரீதி­யான தொடு­கை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தாகக் கூறி­யுள்­ள­னர்.இத­னால் தமக்கு ஏற்­ப­டும் அவ­மா­னம் மற்­றும் அச்­சம் குறித்து ஆய்­வின்போது பெண்­கள் விப­ரித்­துள்­ள­தா­க­வும் ஐக்­கிய நாடு­கள் சனத்­தொகை நிதி­யத்­தின் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ad

ad