புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2018

செயற்படுங்கள்! தவறினால் துரோகிகளாகவே அடையாளப்படுத்தப்படுவீர்கள்!

பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார்கள். நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராடியதாகவும், ஆனால் இன்று நாங்களும் சுதந்திரமில்லாமல் வாழ முடியாமலும் தங்களுக்காகப் போராடும் நிலை காணப்படுவதாகக் கூறிக் கவலைப்பட்டார்கள். எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது.

எங்களுடை நோக்கம் இந்த அரசியல் கைத்திகளின் பிரச்சினையை வெளியுலகிற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காவே இந்த நடை பயணத்தை ஆரம்பித்து நடந்து வந்திருந்தோம்.வவுனியா வரையிலும் பொதுமக்களின் ஆதரவு அதிகமாகக் காணப்பட்டது. ஆனால் பொறுப்புக்கூற வேண்டிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் தொடர்புகொண்டு எது என்னவென்று இதுவரை கேட்கவில்லை.

நாங்கள் யாருக்காக நடந்து வந்தோம்? எதற்காக நடந்து வந்தோம்? என்பதை அவர்கள் அறிந்தும் தெரிந்திருந்தும் எவுவென்று கேட்கவில்லை.

எமது வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு அனுப்பட்ட எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமாக அரசியல் கைதிகள் விவகாரத்தில் பாரிய குற்றத்தினை செய்து வருகிறார்கள். கைத்திகள் விடயத்தில் எதுவித கரிசனைகளும் காட்டவில்லை. அவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கிற நிலையே காணப்படுகிறது.

இதேநேரம் இந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு இவ்வாறான பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்பது தொடர்பில் தங்களுக்குள் கலந்துரையாடியதாக இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதில்லை.

இதற்கு மாறாக ஜனாதிபதியை ஓரிருவர் போய்ச் சந்திப்பதும், வாக்குறுதிகளை வழங்குவதும், அறிக்கை விடுவதுமாகவே இருந்து வருகிறார்கள்.

அரசியில் கைத்திகள் விடயத்தில் 16 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக கண்டிப்பாகவும் உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றோம்.

நீங்கள் எங்களின் வாக்குகள் மூலம் தான் பாராளுமன்றம் சென்றீர்கள். நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும். மறாக எங்களால் போராடி உலகிற்கு தெரியப்படுத்த முடியுமே தவிர நாங்கள் இதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது.

எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது கைதிகளின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முடித்து வைக்க எங்களுக்கு விருப்பமாக உள்ளது ஆனால் எங்களால் முடியாமல் போயுள்ளது.

நாங்கள் உரியாக கேட்கிறோம். எங்களது உரிமைகளுக்காகப் போராடிய அந்த உறவுகளை மீட்க ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யத்தவறினால் தமிழினத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்த துரோகிகளாகவே நீங்கள் அடையாளப்படுத்தப்படுவீர்கள் என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் கிஷ்ணமேனல் கைதிகளைச் சந்தித்த பின்னர் நிலைமை குறித்து விளக்கமளித்தார்.

ad

ad