புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2018

ஜேர்மனியை வென்றது நெதர்லாந்து

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக் தொடரில், நெதர்லாந்தில் இலங்கை நேரப்படி இன்று
அதிகாலை இடம்பெற்ற குழு ஏ1 போட்டியொன்றில் ஜேர்மனியை நெதர்லாந்து வென்றது.
இப்போட்டியில், நெதர்லாந்தின் மெம்பிஸ் டிபே உதைந்த மூலையுதையை அவ்வணியின் றயான் பாபெல் தலையால் முட்டி அது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி வந்திருந்த நிலையில், கோல் கம்பத்துக்கு அருகிலிருந்த நெதர்லாந்தின் அணித்தலைவரான வேர்ஜில் வான் டிஜிக் தலையால் முட்டிப் பெற்ற கோல் மூலம் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து, நெதர்லாந்தின் ஜோர்ஜினியோ விஜ்னால்டும் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்ததுடன், டிபே உதைந்த உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது.
இந்நிலையில், ஜேர்மனி சார்பாக இரண்டாவது பாதியில் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்ட லெரோய் சனே வேறெந்த வீரராலும் அடையாளப்படுத்தப்படாமல் கோல் கம்பத்திலிருந்து எட்டடி தூரத்திலிருந்தபோதும் அவர் உதைந்த உதையும் கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது.
பின்னர், அதிரடி நகர்வை மேற்கொண்ட நெதர்லாந்தின் குயின்ஸி ப்ரோமெஸ் வழங்கிய பந்தை போட்டியின் 86ஆவது நிமிடத்தில் டிபே கோலாக்கி கோலெண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார். பின்னர் டிபேயின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்த நிலையில், போட்டியின் இறுதி நிமிடங்களில் ஜோர்ஜினோ விஜ்னால்டும் பெற்ற கோலோடு இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது.
அந்தவகையில், கடந்தாண்டு ஒக்டோபர் உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளின் பிற்பாடு, உலகக் கிண்ணத்தில் சுவீடனுக்கெதிராகப் பெற்ற வெற்றியே ஜேர்மனி பெற்ற ஒரேயொரு வெற்றியாக இருக்கிறது.

ad

ad