அரசியல் கைதிகளது விடுதலைக்கான கோரிக்கையினை முன்வைத்து மக்கள்,மாணவர்களின் ஆதரவுடன் பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம் இன்றிரவு வவுனியாவை சென்றடைந்துள்ளது.அவர்களின் தொடர் நடைபயணத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்,தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவ அமைப்புக்கள் இணையவுள்ளன.
இதனிடையே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 கோரிக்கையை முன் வைத்தோம் எனவும், அதில் அரசியல் கைதிகளின் விடுதலையும் ஒன்று எனவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டார் எனவும் தெரிவித்தனர். ஆனால் தற்போது அரசியல் கைதிகள் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இம்முறை வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும்போது, அரசியல் கைதிகள் விடுதலையை முன்னிறுத்த வேண்டும் என ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பில் கோருகின்றோம் என தெரிவித்தார்.