புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2018

வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்கான ஆவணங்கள் சோடிக்கப்பட்டவை’

போர்த்துக்கல்லினதும் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸினதும் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கெதிரான
முன்வைக்கப்பட்டுள்ள வன்புணர்வுக்கான ஆவணங்கள் முழுமையாக சோடிக்கப்பட்டவையென ரொனால்டோவின் வழக்கறிஞர் பீற்றர் கிறிஸ்டியான்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரொனால்டோ மீது குற்றச்சாட்டை முன்வைத்த கதரின் மயோர்காவோடு ரொனால்டோவின் பிரதிதிகள் 2010ஆம் ஆண்டு இணக்கமொன்றுக்கு வந்ததை கிறிஸ்டியான்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், 2009ஆம் ஆண்டு நேர்காணல் மேற்கொள்ளப்பட்டபோது தன் மீது யார் தாக்குதல் நடத்தியதென அடையாளங்காட்டவில்லையெனவும் வழக்கைத் தொடர விரும்பவில்லையெனவும் பொலிஸ் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

ad

ad