புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2018

யாழ்.சென்ற தமிழ்நாட்டுக் குழு தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில்
அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இலங்கைக்கு விஐயம் செய்துள்ள இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் கொண்ட குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர்.
கலாசார ரீதியான பயணமாக விஜயம் வெய்த அவர்கள் அங்கு பலவேறு தரப்பினர்களையும் சந்தித்துவரும் வருகின்றனர். இதனிடையே அவர்கள் தியாகி திலீபனின் நினைவிடத்திற்குச் சென்று தமது அஞ்சலியை செலுத்தினர்.
இதன்போது, “தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தியாகிக்கு மரியாதை செலுத்தி எங்களுடைய அஞ்சலிகளைச் செலுத்தியிருக்கின்றோம்.
இந்த மண்ணுக்கு கலாச்சார ரீதியான பயணமாக நாம் வந்திருந்தாலும் திலீபனுடைய நினைவிடத்திற்கு வந்திருப்பது உணர்வை வெளிப்படுத்துவதுடன் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. எங்களுடைய நீண்ட கால உறவையும் இது வெளிப்படுத்துவதாக அமைகின்றது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்”
இக்குழுவில் தமிழ்நாடு – சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் பொதுநிர்வாகம் மற்றும் சர்வதேச விவகாரங்களிற்கான பீடத்தின் தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன், தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர், மக்கள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் வழக்கறிஞர் கென்றிதிபேன், தமிழ் துறை பேராசிரியர் அரசேந்திரன், பேராசிரியர் குழந்தைசாமி, பேராசிரியர் இராணி செந்தாமரை, வழக்கறிஞரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான பாண்டிமாதேவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ad

ad