28 நவ., 2018

மக்களோ முகாம்களில்;:தென்னந்தோப்பில் படையினர்


யாழ்ப்பாணம் வலி. வடக்கில் விரட்டியடிக்கப்பட்டுள்ள மக்கள் 34 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள நிலையில் பலாலி இராணுவ முகாமை அண்டிய பகுதிகளில் படையினரது தென்னந்தோட்டங்கள் செழிக்கத்தொடங்கியுள்ளன.

பலாலியை சூழ உள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்களில் 536 ஏக்கர் நிலத்தில் படையினரால் இதுவரை 22 ஆயிரம் தென்னங் கன்றுகள் நாட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இதேநேரம் இராணுவத்தினரால் மேற்கொள்ளும் தென்னைச் செய்கையில் இதுவரை 22 ஆயிரம் தென்னைகள் நாட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதேநேரம் மக்களிற்குச் சொந்தமான மேலும் பல நூறு ஏக்கர் நிலங்களை படையினர் உழுது பன்படுத்தி தென்னைச் செய்கைக்கு தயார் படுத்தி வருகின்றனர்.

குறித்த நிலங்களின் உரிமையாளர்கள் கடந்த 28 வருடங்களாக தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி நாட்டின் பல பாகத்திலும் முகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் ஏதிலிகளாகவும் வாழும் அவலம் இன்றும் தொடர்கின்றது.

இதேநேரம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் படையினரால் ஒரு லட்சம் தென்னம் பிள்ளைகளை நாட்டுத் திட்டமிட்டுள்ள நிலையில் இச் செய்கைக்காக 2 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணிப்பிடப்பட்டுள்ளது