28 நவ., 2018

கனகபுரம் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!


தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்
துயிலும் இல்லத்தில் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
மாவீரர்களின் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில், தமிழீழ உணர்ச்சிப்பாடல்கள் ஒலிக்க மிகவும் உணர்வுபூர்வமாக குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மாவீரர்களின் நினைவுக்கற்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு அவற்றிற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
தமது உறவுகளை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர்மாலைகளை அணிவித்தும், தீபங்ளை ஏற்றியும் இந்நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெற்று வருகின்றது.
இந்நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருளவானோர் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.