28 நவ., 2018

விக்கினேஸ்வரனின் பாதுகாப்பு முற்றாக நீக்கம்!

வடமாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு நீக்கத்திற்கான உத்தரவு மைத்திரியாலேயே வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.நேற்று முன்தினம் காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்த போது காவல்மா அதிபருக்கு இதற்கான அறிவுறுத்தலை மைத்திரி வழங்கியதாக தெரியவருகின்றது.
இதனிடையே கொழும்பிலுள்ள முதலமைச்சருடன் தரித்திருக்கின்ற மெய்ப்பாதுகாவலர்களை உடனடியாக அக்கடமைகளிலிருந்து விலக்கிக்கொள்ள காவல்துறை மா அதிபர் இன்று பணித்துள்ளார்.

எனினும் குறித்த காவல்துறையினர் யாழ்ப்பாணம் திரும்பி தமது கடமை நிலையங்களிற்கு செல்ல கால அவகாசம் கோரி முதலமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னைய செய்தி ...

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிற்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதலமைச்சர் பதவியிலிருந்த காலப்பகுதியில் அவருக்கு நான்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.அவர்களில் இருவர் அவருடன் எந்நேரமும் இருக்கின்ற மெய்ப்பாதுகாவலராக கடமையிலீடுபடுத்தப்பட்டிருந்தனர்.ஏனைய அறுவர் வதிவிட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்த பின்னராக  மெய்ப்பாதுகாவலர் இருவர் உட்பட நால்வர் பணிக்கமர்த்தப்பட்டிருந்தனர்.

இன்று காலை அவர்களை அனைவரும் மீள காவல்துறை உயர்மட்டத்தால் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் தற்போது கொழும்பு சென்றிருக்கின்ற நிலையில் அவரது பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள அறிவுறுத்தலையடுத்தே பாதுகாப்பு நீக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.