புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2018

மஹிந்த ராஜினாமா?:நாடாளுமன்றினை ஒத்தி வைக்க மைத்திரி முயற்சி!

நாளை காலை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் புதிய பிரதமர் மஹிந்த தனது பதவியை ராஜினாமா செய்து மைத்திரியிடம் கடிதத்தை கையளித்துள்ளார்.

நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து தப்பிக்கவே மஹிந்த முன்னதாகவே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எனினும் மஹிந்தவின் ராஜினாமாவை மைத்திரி ஏற்றுக்கொள்வாராவென்ற தகவல்கள் இதுவரையில்லை

இன்றைய நீதிமன்ற விசாரணையில் தேர்தல் அறிவிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கே தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தேர்தல் முடிவில் மாற்றமில்லாத நிலையே இருப்பதுடன் இறுதி நீதிமன்ற தீர்ப்பு அதற்காதரவாகவே வருமென மஹிந்த தரப்பு நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்நிலையில் நாளைய தினம் நாடாளுமன்றம் திட்டமிட்ட வகையில் கூடவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாளைய தினம் தனக்கெதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறுமென மஹிந்த நம்புகின்றார்.அதனையடுத்தே தனது ராஜினாமா கடிதத்தை மைத்திரியிடம் கையளித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. எனினும் மஹிந்தவின் ராஜினாமாவை மைத்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனிடையே நாளை நாடாளுமன்றம் கூடுவதை தடுக்கும் வகையில் இறுதி நேர முயற்சிகளில் இன்றிரவு மைத்திரி குதிக்கலாமென கொழும்பு வட்டாரங்களிடையே பரபரப்பான நிலை காணப்படுகின்றது.

எனினும் நாளை நாடாளுமன்றம் கூடுமிடத்து அது ஜனாதிபதி மைத்திரிக்கும் தலையிடி தருவதாக இருக்குமென சொல்லப்படுகின்றது.  

ad

ad