புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2018

யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் உதயம்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் புதிதாக உதயமாகவுள்ளது. இதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று 2019 இல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்து நாகரிகம், சைவசித்தாந்தம், சமஸ்கிருதம் ஆகிய துறைகளுடன் இந்தப் பீடம் அமையும் வாய்ப்பு உள்ளது.

இதனால் இந்தப் பீடத்திற்கான கற்கை நெறிகளில் பல்கலைக்கழக அனுமதிக்கான வாய்ப்பும் அதிகரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

இந்து கற்கைகளுக்கான பீடம் ஒன்றின் அவசியம் பற்றி நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த 2015 இல் யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறையால் நடத்தப்பட்ட அனைத்துலக சைவமாநாட்டில் பீட உருவாக்கம் பற்றிய பேச்சு ஓங்கி ஒலித்திருந்தது. இது தற்போது செயல்வடிவம் பெறும் நிலையை நெருங்கி இருப்பதாக அறிய முடிகின்றது.

பீடம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் அங்கீகரித்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் புதிய பீடம் பற்றிய அறிவித்தலை உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிக் கல்விக்கான பீடம் தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் உள்ளது. இதே போல பௌத்த கற்கைகள் பாளி மொழிக் கல்விக்கென ஹோமாகமவில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad