புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2018

வெளிவிவகார அமைச்சராக சுமந்திரனா?இல்லை ஆனால் மாவை சொல்கிறார்

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அமைச்சரவையின் நிதியமசை;சராக ரவிகருணாநாயக்கவும் வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பதிலளித்த தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அரசுடன் கூட்டமைப்பு இணையாதெனவும் தெரிவித்ததுடன் தொடர்ந்து எதிர்கட்சியாகவே செயற்படுமெனவும் தெரிவித்தார்.

எனினும் சுமந்திரன் அமைச்சராக பொறுப்பேற்காத போதும் அத்தகைய அந்தஸ்துடன் அரசில் ஆதிக்கம் செலுத்துவாரென அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ad

ad