புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2019

புங்குடுதீவு  மத்திய பிரதேச சபை  வடடாரத்திலும் மின்விளக்குகள் பொரு த்தப்படடன கடந்த 02.02.2019 மற்றும் 07.02.2019
ஆகிய தினங்களில் புங்குடுதீவு மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான திரு . புவிவேந்தன் அவர்களின் நிதியுதவியில் சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் 21 மின்விளக்குகள் புங்குடுதீவில் பொருத்தப்பட்டன . புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் ராஜேஸ்வரி பாடசாலை வீதி , கலட்டி பிள்ளையார் கோயில் வீதி என்பனவற்றில் பத்து மின்விளக்குகளும் அதே வட்டாரத்தில் மணியந்தோட்ட வீதி மற்றும் அதன் சூழலில் மூன்று மின்விளக்குகளும் பன்னிரெண்டாம் வட்டாரத்தில் அம்பலவாணர் அரங்கு வீதி , உயரப்புலம் வீதி என்பவற்றில் ஐந்து மின்விளக்குகளும் , மூன்றாம் வட்டாரத்தில் சங்கத்தார்கேணி சண்ஸ்ரார் விளையாட்டு கழக மைதான வீதியில் மூன்று மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன . மேலும் ஐந்து மின்விளக்குகள் விரைவில் முதலாம் வட்டாரத்தில் பொருத்தப்படவுள்ளன . நிதியுதவியை வழங்கிய திரு . புவிவேந்தன் அவர்களுக்கும் , மின்சார சபையினரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு உதவிய வட மாகாண ஆளுநரின் செயலர் திரு . இலட்சுமணன் இளங்கோவன் அவர்களுக்கும் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . #சூழகம்_Soozhaga

ad

ad