புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2019

யாழ்ப்பாணத்திலுள்ள திறமையானவர் கொழும்பு வர முடியாது’முத்தையா முரளிதரன்,

“இலங்கையில் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் கிரிக்கெட் பரவவில்லை. அது கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ள இலங்கையணியின் முன்னாள் வீரர் வறுமையானதொரு ஆனால் திறமையான நபர் கொழும்புக்கு வர முடியாது எனக் கூறியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த முரளிதரன், ஏனைய மாவட்டங்களில் திறமைகள் இழக்கப்படுவதாகவும் ஒன்று அல்லது இரண்டு மாவட்ட வீரர்களே, அவர்கள் கொழும்புக்கு அருகில் இருப்பதால் வருவதாகக் கூறியுள்ளார்.

இதுதவிர, “[குசல்] மென்டிஸ் போன்ற இளம் வீரர்கள், நிறையத் திறமையைக் கொண்டிருக்கின்றபோதும் அவர்கள் மிகவும் தொடர்ச்சியற்றவர்களாக இருக்கின்றார்கள். இது, அவர்களது துடுப்பாட்டத்தில் மிகவும் அழுத்தத்தை வழங்குகின்றது. கடந்த மூன்று தொடக்கம் நான்கு ஆண்டுகளாக இதே கதையாகவுள்ளது. அங்கே எந்தவொரு முன்னேற்றமும் நிகழவில்லை. வருகின்ற இளம் வீரர்கள் திறமையைக் கொண்டிருப்பதில்லை. சர்வதேச கிரிக்கெட்டின் மத்தியில் அனுப்பப்படும்போது அவர்களால் என்ன செய்ய முடியும்.

இந்நாட்களில் இலங்கை மிகவும் மோசமாக விளையாடுகிறது. ஆனால், அவுஸ்திரேலியாவும் மோசமாக விளையாடுகிறது. எவ்வாறெனினும், அவுஸ்திரேலியாவை விட இலங்கை மோசமாக விளையாடுகிறது. பாடசாலைக் கிரிக்கெட்டின் மட்டம் கீழே சென்றுள்ளது. நாங்கள் முதற்தரப் போட்டிகளிலிருந்து தயாரிக்க வேண்டும். ஆனால் திறமை அங்கில்லை.

சர்வதேச கிரிக்கெட் சபை [மோசடி தொடர்பாக] எந்தப் பெயர்களையும் வெளியிடவில்லை. அது இல்லாமல் ஒரு நாட்டை நீங்கள் எவ்வாறு குற்றஞ்சாட்ட முடியும். சர்வதேச கிரிக்கெட் சபை பெயர்களை வெளிப்படுத்தி இதைத்தான் அவர்கள் செய்தனர் என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

ad

ad