5 பிப்., 2019

தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை ஸ்பெயின் பார்சிலோனாமாநகர சபை தீர்மானம்

சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பார்சிலோனா மாநகர சபைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மாநகர சபைக்கூட்டத்தில் சிறிலங்காவின் தமிழின அழிப்புக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகளை தருவதற்கு சிறீலங்கா அரசு மறுக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் மற்றும் போர் கைதிகளை சிறிலங்கா அரசு தாமதமின்றி விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் இதில் அடங்கும். சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க சிறப்பு தூதுவரை ஐ.நா. சபை நியமிக்க வேண்டும் என்றும் பார்சிலோனா மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.