5 பிப்., 2019

பிரபல பாதாள உலக குழுத் தலைவர் டுபாயில் கைது

பிரபல பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் உள்ள விடுதியொன்றில் வைத்து போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாய் மற்றும் இந்நாட்டு பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களுள் பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் 5 பேர் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதில் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கஞ்சிபாணி இம்ரான், கேசல்வைத்தே தினுக் மற்றும் இலங்கையின் பிரபல பாடகர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.