5 பிப்., 2019

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று

முன்மொழியப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய அரசாங்கம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும் யோசனைக்கு எதிராக, சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.