புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2019

அபிநந்தனின் புதிய காணொளி! சர்ச்சையில் சிக்கிய தொலைக்காட்சி !


பாகிஸ்தானில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் 21 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் மண்ணில் விழுந்தது முதல் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்ட நேரம் வரையில் அங்கு என்ன நடந்தது என்று பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில் ஏபிபி செய்தி நிறுவனம், பாகிஸ்தானில் அபிநந்தன் விழுந்தது முதல் அவர் தன்னைப் பற்றியும், நாட்டைப் பற்றியுமான ஆதாரங்களை எப்படி அழித்தார் என்பது குறித்து தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ளது!
அதில், அபிநந்தனை போலவே இருக்கும் நபர் ஒருவர் அவரது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாராசூட்டுடன் பாகிஸ்தான் மண்ணில் விழும் அபிநந்தனைச் சுற்றி, அங்கிருந்த சிலர் சூழ்ந்துகொள்கின்றனர். இதனால் அவர் துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறுகிறார். அவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டி, ‘இது இந்தியாவா? பாகிஸ்தானா’ என்று கேள்வி எழுப்புகிறார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று தன்னிடம் இருந்த ஆவணங்களை அருகில் உள்ள ஆற்று நீரில் தூக்கி எறிவது போன்றும், சில ஆவணங்களை வாயில் போட்டு மென்றுவிடுவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இது குறித்த தகவல்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், பாகிஸ்தானில் அபிநந்தன் எவ்வாறு தரையிறங்கினார் என்று இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ad

ad