புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 மார்., 2019

அம்மாச்சியை விற்றது மோசடி சத்தியலிங்கமே


வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் தூண்டுதலிலேயே அம்மாச்சி பெயர் மாற்றப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றார். ஆகவே அவரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அம்மாச்சி உணவகம் பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது என எதிர்ப்புக்குரல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெடுங்கேணி அம்மாச்சி உணவகம் திறப்பு விழா தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் வவுனியா வடக்கு பிரதேச சபையினால் இன்றைய தினம் அம்மாச்சி உணவகம்( வன்னி அறுசுவையகம் ) வைபவ ரீதியா திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சென்ற மாதம் நடைபெற்ற மாதாந்த சபை அமர்வில் இன்றைய நிகழ்வு தொடர்பில் சுமார் 30 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டு இறுதியில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபரையும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரையும் அழைப்பது என தீர்மானிக்கப்பட்டு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இன்றைய நிகழ்விற்கு முன்னால் ஜனாதிபதியை அழைப்பது என தவிசாளரால் எமக்கு தெரிவிக்கவில்லை.

நேற்றைய தினம் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட அழைப்பிதழில் ஊடாகவே அறிந்து கொண்டோம். அதனால் இன்றைய நிகழ்வை புறக்கணித்துள்ளோம்.
அத்தோடு இன்றைய தினம் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடந்த மாத சபை அமர்வு கூட்டறிக்கையில் முன்னால் ஜனாதிபதியை அழைப்பது எனவும் சபை நிதியிலிருந்து 30000.00 ரூபாய் அதன் செலவீனங்களுக்காக ஒதுக்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக தகவல்கள் திரிவுபடுத்தப்பட்டு அறிக்கையிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் சபை அமர்வுகளின் ஆரம்பத்தில் அம்மாச்சி உணவகம் என்றே எமக்கு தவிசாளரால் அறிமுகபடுத்தப்பட்டு பல மாதாந்த அறிக்கைகளிலும் எழுத்து மூலமாக எழுதப்பட்டும் இருக்கின்றது. திடீரென அதன் பெயர்பலகை மாற்றம் பெற்றதனையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அத்தோடு வருகின்ற 14ம் திகதி நடைபெற உள்ள சபை அமர்வில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு தொடர்பில் சரியான பதிலை தவிசாளர் அவர்கள் எமக்கு வழங்கவேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் சபை அமர்வை புறக்கணிக்கவும் தீர்மானித்துள்ளோமென உறுப்பினர்களின் ஒரு சாரரால் அறிவிக்கப்பட்டுள்ளது