புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2019

எமக்கான நீதி கிடைக்காமல் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோமா? அமெ.தூதுவரிடம் ஆதங்கப்பட்ட சிறிதரன்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஐ.நா தீர்மானத்தின் மூலம் நீதி கிடைக்குமா? அல்லது இப்படியே ஏமாற்றப்பட்டு எமது மக்களுக்கு நீதி கிடைக்காமல் போகுமா? எமது மக்களுக்கான முடிவுதான் என்ன என அமெரிக்க உயர்ஸ்தானிகரிடம் ஆதங்கப்பட்டடார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் இம்முறை இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் கொண்டுவரப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் பல தரப்பினராலும் பல்வேறுபட்ட சர்ச்சைகளடங்கிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள வேளையில், அமெரிக்க உயர்ஸ்தானிக்கரான அலைனா ஸ்ரெபீஸ் அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்படி ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில் மேற்படி அமெரிக்க உயர்ஸ்தானிகரான அலைனா ஸ்ரெபீஸ் அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், ஈ.சரவணபவன் மற்றும் வடமாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அகியோர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்; இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தமது தரப்பு ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார் என ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்,

அவர் மேலும் கூறுகையில் –

இலங்கை தொடர்பான ஐ.நா சபையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களும் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கக் கூடாது என்கிறார்கள் அதேபோல புலம் பெயர் தேசத்திலுள்ள அமைப்புக்களும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்கிறார்கள் இதே நேரம் இலங்கையின் ஜனாதிபதியும் ஐ.நா சபையால் இலங்கைக்குக் கால அவகாசம் என்பது வழங்கப்படத் தேவையில்லை இதனை இவ்வாறே விட்டு விடுங்கள் எனக் கூறுகின்றார்.

இந்நிலையில் இதன் தாற்பரியம் என்ன? இது என்னவாக நடக்கும்? நாம் ஏமாற்றப்பட்டு விட்டோமா? ஐ.நாவாலும் எமக்கு நீதி கிடைக்காதா? என அமெரிக்க உயர்ஸ்தானிகரிடம் நாம் எமது தரப்புக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தோம்.

அதற்கு அவர், தாங்கள் இலங்கை தொடர்பில் எடுத்துள்ள தீர்மானங்களிலிருந்து விலகவில்லை எனவும். தாங்கள் அதனை கைவிட்டு விடாத வகையில் முன்னெடுத்துச் செல்வோம் எனவும் இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது என்பது தொடர்பில் நாம் செயற்பட்டு வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

இலங்கையுடன் சேர்ந்து சில விடயங்களைக் கையாள்வதா? அல்லது எதிர்த்து நின்று முன்னெடுப்பதா அப்படி நாம் எதிர்த்தால் இலங்கையுடன் அவர்களுக்கு ஆதரவாக யார் யார் கூட்டுச் சேர்வார்கள் என்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியே எமது முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனாலும் நாம் இவ்விடயத்தைக் கைவிடவில்லை. இம்மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை அமெரிக்கா அவர்களுக்காகச் செயற்படும் என அவர் மேலும் தெரிவித்தா

ad

ad