புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2019

சிறிலங்கா வருகிறது சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு


சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தக் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

எனினும், குழுவின் பயண நாட்கள் தொடர்பான விபரங்கள், மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் கடந்த பெப்ரவரி 18ஆம் நாள் தொடக்கம் 22 ஆம் நாள் வரை நடந்த சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழுவின் இரகசியக் கூட்டத்திலேயே சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கான பயணம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரித்தானியா, காபோன், செனகல், கானா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்த இந்தக் குழு தற்போது மேலதிகமாக சிறிலங்கா, ஆஜென்ரீனா, பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது

ad

ad